உலக சமூக நீதித் தினம்

உலக சமூக நீதித் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் ஏற்பாட்டில் பெப்ரவரி 20 ஆம் திகதி கொழும்பு விகாரமகாதேவி திறந்த வெளி அரங்கில் நிகழ்வொன்று நடைபெற்றது. மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில் ஏறத்தாள நூறுபேரளவில் கலந்துகொண்டனர்.

சமூக நீதி குறித்தும் அதன் தேவை குறித்தும் மக்களை விழிப்புணர்வூட்டும் நோக்கில் 2 வது முறையாகவூம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராக ராவய பத்திரிகையின் ஆசிரியர் சட்டத்தரனி மு.று. ஜனரன்ஜன கலந்துகொண்டு இலங்கையில் சமூக நீதி குறித்து பேசியதுடன் ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் பொதுச் செயளாலர் சட்டத்தரனி றுடானி ஸாஹிர் மற்றும் 4 வது இலங்கை இளைஞர் பாராளுமண்றத்தின் சபாநாயகரும் 2016 ஆம் ஆண்டுக்காண ஐக்கிய நாடுகள் இளைஞர் மாநாட்டின் இலங்கைக்கான பிரதிநிதி சசின்த துலன்ஜன ஆகியோர் சமூக நீதியில் இளைஞர் மற்றும் மாணவர்களின் பங்களிப்பு குறித்தும் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் தேசியத் தலைவர் M L M தௌபீக்இ உப தலைவர்களான அஷ். ஆஸாத் சிராஸ் மற்றும் சல்மான் அக்ரம் ஆகியோருடன் மத்திய சபை அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.

1

3

4

5

7

6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)