மீண்டும் பள்ளிக்குப் போகலாம்

ஸ்ரீலங்கா இஸ்லாமிய இயக்கம் மற்றும் Islamic Inspiring Words (IiWords)  என்பன இணைந்து வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டு தமது கல்வி நடவடிக்கையை தொடர முடியாதுள்ள மாணவர்களுக்கு உதவும் முகமாக வழங்கப்பட்டு வருகின்ற கற்றல் உபகரணங்கள் மற்றும் பாதணிகள் கையளிக்கும் ‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’ தொடர் வேலைத் திட்டத்தின் ஒருபகுதி கடந்த 28.10.2016 அன்று அரநாயக பிரதேச செயலாளர் கட்டிட தொகுதியில் இடம்பெற்றது. இங்கு 158 மாணவர்களுக்கு தலா 4000.00 பெறுமதியான கற்றல் உபகரணப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
 
இந்த நிகழ்வு ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் தேசியத் தலைவர் எம்.எல்.எம். தௌபீக் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அரநாயக பகுதி பிரதேச செயலாளர் திரு. பய்ஸல் அவர்கள் கலந்து கொண்டதோடு ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் பொதுச்செயலாளர் றுடானி ஸாஹிர், துணைத் தலைவர் அஷ் எம்.என்.எம். ரிழ்வான் (இஸ்லாஹி), இத்திட்டத்தின் பிரதமத இணைப்பாளர் முஆஸ் பத்ஹுல்லாஹ் மற்றும் இயக்கத்தின் தேசிய அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

1-copy 2-copy 3-copy 4-copy 5-copy 6-copy 7-copy 8-copy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)