மீண்டும் பள்ளிக்கு போகலாம்

ஜூன் மாதமளவில் நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தமது கற்றல் உபகரணங்களை இழந்து கல்விகற்பதற்கான சந்தர்ப்பத்தை இழந்து நிற்கும்  மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்,மற்றும் பாதணிகளை கையளிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் மூன்றாம்,நான்காம் கட்ட நிகழ்வுகள் கொழும்பு- 10 தாருஸ்ஸலாம் மகாவித்தியாலயம், தில்லையடி முஸ்லிம் மகாவித்தியாலயம் மற்றும் சென் மேரிஸ் தமிழ் மகாவித்தியாலயம் என்பவற்றில் செப்டம்பர் மாதம் 18,14 ந் திகதிகளில் நடைபெற்றது.   

ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் Islamic Inspiring Words (IIW) உடன் இணைந்து “மீண்டும் பள்ளிக்கு போகலாம்” என்ற நாமத்தில்  நடாத்திய இந்நிகழ்வில் இயக்கத்தின் தேசிய தலைவர் எம்.எல்.தெளபீக் மற்றும் மத்திய சபை உறுப்பினரும், இந் நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதம இணைப்பாளருமான முஆஸ் பத்ஹுல்லா அவர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் சுமார் 250 மாணவர்கள் பயனாளிகளாக கலந்துகொண்டனர்.

இந் நிகழ்ச்சித் திட்டத்தின் அடுத்த நிகழ்வுகள் கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி, அல்-ஹக்கீம் வித்தியாலயம்,அல்-ஹம்ஸா வித்தியாலயம்,டாக்டர் பதுருதீன் மகாவித்தியாலயம் என்பவற்றில் இடம்பற ஏற்பாடாகியுள்ளன.

a d s

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)