யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலை; நீதியான விசாரணை வேண்டும்

கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் கடந்த வியாழக்கிழமை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் நள்ளிரவில் கொல்லப்பட்ட சம்பவம் எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அச்சமும், பீதியும் சூழ்ந்து கிடந்த ஆட்சியொன்றை துரத்தியடித்து இந்நாட்டு மக்கள் தோற்றுவித்த இந்த நல்லாட்சிக்கு இச்சம்பவம் இளுக்கொன்றை ஏற்படுத்யுள்ளது என்று நாம் கருதுகின்றோம். சம்பவத்தினை அடுத்து அரசு எடுத்திருக்கின்ற துரித நடவடிக்கைகள் நம்பிக்கையூட்டுகின்ற அதேவேளை குறித்த அசம்பாவிதம் தொடர்பாக பாரபட்சமற்ற இழுத்தடிப்பற்ற விசாரணைகள் நடாத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என மாணவர் சமூதாயம் சார்பாக ஸ்ரீலங்கா இஸ்லாமிய இயக்கம் வலியுறுத்துகின்றது.

அண்மைக்காலமாக பல்கலைக்கழகங்களினுள்ளும் வெளியிலும் மாணவர்கள் தொடர்பாக இடம் பெறுகின்ற நிகழ்வுகள் மாணவர் இயக்கமாகிய எம்மை கவலையடைச் செய்கின்றன.

இன, மத வேறுபாடுகளை கடந்து மாணவர் சமுதாயம் ஒன்றாக எமது உரிமைகளை பெற்றுக் கொள்ள போராடுகின்ற அதேவேளை எமது அடிப்படை உரிமைகளான நடமாடும் சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்பன பேணப்படவும் பாதுகாக்கப்படவும் வேண்டும் என மேலும் வலியுத்துகின்றோம்.

இத்துன்பியல் நிகழ்வினால் கொல்லப்பட்ட இரு சகோதரர்களான சுலக்ஷன் மற்றும் கஜன் ஆகியோரினது இழப்பினால் மீழாத்துயரில் ஆழ்ந்துள்ள பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் யாழ். பல்கலைக்கழக சமூகம் என்போரின் உணர்வுகளுடன் நாம் ஒன்றித்திருப்பதுடன் ஆழ்ந்த அனுதாபங்களையும் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

றுடானி ஸாஹிர்
பொதுச்செயலாளர்
ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம்.
24.10.2016

30579f56-d6a3-422c-935d-ba267101a6ae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)