SAFTA – Spiritual Awakening For Teen Ages

ரழமான் விடுமுறை காலத்தை பயனுள்ளதாக அமைத்துக்கொள்வதை முன்னிட்டும்,மாணர்வகளது ஆன்மீக ஒழுக்க வாழ்க்கை மேம்படுத்துவதை நோக்காக கொண்டு தயாரிக்கப்பட்ட விஷேட நிகழ்ச்சித்திட்டமாகும். மாணவர்களது நெறிபிறழ்வை சுட்டிக்காட்டி அவர்களை பலவீனப்படுத்துவதை விட அவர்களுடைய பல்துறை மேம்பாட்டுக்குமான வாழிகாட்டல்களை கொடுப்பதே அவர்களுக்கு பெற்றோரும், சமூகமும் செய்ய வேண்டிய கடமைகளாகும். இவ்வகையில் இஸ்லாமிய மாணவர்
இயக்கத்தின் விஷேட செயற்த்திட்டங்களில் ஒன்றாக இது அமைந்திருக்கின்றது.
பெரும்பாலும் மாணவர்களது அறிவு, திறன் போன்றவற்றுக்கான போதுமான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டாலும் அவர்களது ஆன்மீக, ஒழுக்க வாழ்வுக்கான வழிகாட்டல்கள் கிடைக்கப்பெறுவது மிகக் குறைவாகும். இவை பற்றி போதிய அறிவும், அக்கறையும் கூட பல பெற்றோர்களிடம் இல்லாமை கவலைக்குரியதாகும். எனினும் எல்லா பெற்றோரதும் எதிர்பார்ப்பு தன் பிள்ளை நல்ல ஒழுக்கமுள்ள, மார்க்க விடயங்களில் அக்கறையுள்ள அறிவும், திறனும் கொண்டவனாக இருக்க வேண்டும் என்பதாகும். இத்தேவையை ஜம்இய்யத்துத் தலபா உணர்ந்நதன் விளைவே இந்நிகழ்ச்சித்திட்டதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)